காயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்!

ஒரு ஆண்டுக்கு பிறகு, அணிக்கு திரும்பியுள்ள மெஸ்ஸியின் தலைமையில் வெனிசுவேலாவுக்கு எதிரான நட்பு போட்டியில், அர்ஜென்டினா அணி தோல்வியடைந்த நிலையில், காயம் காரணமாக அடுத்த போட்டியில் மெஸ்ஸி விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

2018 உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தோல்வியடைந்த நிலையில், அர்ஜென்டினா அணியில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஓராண்டில் அர்ஜென்டினா அணிக்காக எந்த போட்டியிலும் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், இந்த வாரம் நடைபெறும் இரண்டு நட்பு போட்டிகளில் மெஸ்ஸி விளையாட உள்ளதாக கூறப்பட்டது. 

நேற்று நடைபெற்ற போட்டியில், வெனிசுவேலாவுக்கு எதிராக அர்ஜென்டினா விளையாடியது. ஏற்கனவே சிறிய காயத்துடன் மெஸ்ஸி அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்றைய போட்டியில், அபாரமாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால், சிறப்பாக விளையாடிய வெனிசுவேலா 3-1 என அபாரமாக வெற்றி பெற்றது. 

போட்டியில் விளையாடிய போது, மெஸ்ஸியின் காயம் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மொரோக்கோவுடன் அர்ஜென்டினா வரும் 26ம் தேதி மோத உள்ளது. ஆனால், காயம் தீவிரமடைந்ததால், மெஸ்ஸி இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP