ட்ரேட்மார்க் வழக்கில் கால்பந்து வீரர் மெஸ்ஸி வெற்றி!

பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது பெயரை, வியாபாரத்துக்கு பயன்படுத்துவதற்காக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

2007ம் ஆண்டு முதல் கால்பந்து உலகிற்கு அறிமுகமான மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றிலேயே தலைசிறந்த வீரராகவும் பலரால் கருதப்படுகிறார். சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதை, 5 முறை பெற்றுள்ள மெஸ்ஸி, அடுத்த ஆண்டு மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

களத்தில் சிறப்பாக விளையாடி வரும் மெஸ்ஸி, அடுத்ததாக, நீதிமன்றத்திலும் வெற்றியை கண்டுள்ளார். 2011ம் ஆண்டு, மெஸ்ஸி தனது பெயரை ட்ரேட்மார்க் செய்ய முயற்சித்தார். ஆனால், மாசி என்ற பெயர் கொண்ட சைக்கிளிங் ஆடை வடிவமைப்பு நிறுவனம், மெஸ்ஸியின் ட்ரேட்மார்க்கு எதிர்ப்பு தெரிவித்தது. இரண்டு பெயர்களும் ஒரு மாதிரி இருப்பதனால், மக்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது என அந்நிறுவனம் கோரியது. அதை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய அறிவுசார் சொத்து உரிமை ஆணையம், மெஸ்ஸியின் ட்ரேட்மார்க்கிற்கு தடை விதித்தது. 

7 வருடங்களுக்கு பிறகு, ஐரோப்பிய மத்திய நீதிமன்றம், இந்த வழக்கில் மெஸ்ஸிக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. "மனுதாரரின் அதீத புகழை கணக்கில் கொண்டால், மக்கள் குழப்பமடைய வாய்ப்பில்லை" என நீதிமன்றம் கூறியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP