மெஸ்ஸி சூப்பர் ஹேட்ட்ரிக்; கோப்பையை வென்றது பார்சிலோனா

ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கோப்பையான லா லிகாவை, பார்சிலோனா எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் நேற்று கைப்பற்றியது.
 | 

மெஸ்ஸி சூப்பர் ஹேட்ட்ரிக்; கோப்பையை வென்றது பார்சிலோனா

மெஸ்ஸி சூப்பர் ஹேட்ட்ரிக்; கோப்பையை வென்றது பார்சிலோனா

ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கோப்பையான லா லிகாவை, பார்சிலோனா எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் நேற்று கைப்பற்றியது. 

இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், டிப்போர்ட்டிவோ லா கொரூனா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா விளையாடியது. இதில் வெற்றி பெற்றால், லீக் கோப்பையை வென்றுவிடலாம் என்று பார்சிலோனாவும், அதேநேரம், இந்த போட்டியில், தோற்றால், ஸ்பானிஷ் முதல் லீக்கில் இருந்து இரண்டாம் லீக்குக்கு தரவிறக்கம் செய்யப்படும் அபாயத்தோடு டிப்போர்ட்டிவோவும் விளையாடியது. 

ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடியது பார்சிலோனா. 6வது நிமிடத்தில், குட்டினோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், 37வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது பார்சிலோனா. சில நிமிடங்களிலேயே அதிரடியாக விளையாட துவங்கிய டிப்போர்ட்டிவோ, ஒரு கோல் அடித்தது. 63வது நிமிடத்தில் அந்த அணியின் எம்ரே கோல் அடிக்க, போட்டி சமன் செய்யப்பட்டது. 

கடைசி நிமிடங்களில், கோப்பையை வெல்ல பார்சிலோனாவும், லீக்கில் இருந்து தரவிறக்கம் செய்யப்படுவதை தடுக்க டிப்போர்ட்டிவோவும், முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடின. ஆனால், 81வது மற்றும் 84வது நிமிடங்களில், மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்து தனது ஹேட்ட்ரிக்கை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், பார்சிலோனாவுக்கு கோப்பையையும் உறுதி செய்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP