600 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி...

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் கோப்பையான லா லிகா-வின் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது. முதலிடத்தில் உள்ள பார்சிலோனா அணியும், 5 புள்ளிகள் பின்தங்கி 2வது இடத்தில் இருந்த அட்லெட்டிகோ மாட்ரிட் அணியும், பார்சிலோனாசின் 'கேம்ப் நூ' மைதானத்தில் மோதின. இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காமல், லீக் தொடரில் வெற்றி நடை போட்டு வருகிறது பார்சிலோனா.
 | 

600 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி...

600 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி...

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் கோப்பையான லா லிகா-வின் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது.

முதலிடத்தில் உள்ள பார்சிலோனா அணியும், 5 புள்ளிகள் பின்தங்கி 2வது இடத்தில் உள்ள அட்லெட்டிகோ மாட்ரிட் அணியும், பார்சிலோனாவின் 'கேம்ப் நூ' மைதானத்தில் மோதின. இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காமல், லீக் தொடரில் வெற்றி நடை போட்டு வருகிறது பார்சிலோனா. இந்த போட்டியில் அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தினால், கோப்பை வெல்வதை பார்சிலோனா உறுதி செய்துவிடும். அதனால் கால்பந்து உலகின் மொத்த பார்வையும் இந்த போட்டியின் மீது விழுந்தது. 

துவக்கம் முதல் பார்சிலோனா வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. அட்லெட்டிக்கோ மாட்ரிட்டுக்கு பந்து கிடைக்காதவாறு அசத்தலாக விளையாடினர் பார்சிலோனா வீரர்கள். போட்டியின் 26வது நிமிடத்தின் போது, பார்சிலோனாவுக்கு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது.

அதில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இது பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக மெஸ்ஸி அடிக்கும் 600வது கோலாகும். இதோடு சேர்த்து, தொடர்ந்து 3 போட்டிகளில் மெஸ்ஸி, ப்ரீகிக் கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பின் அட்லெட்டிக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. பார்சிலோனாவுக்கு கிடைத்த சில வாய்ப்புகளையும் வீரர்கள் கோட்டை விட்டனர். போட்டி 1-0 என முடிந்தது. 

இன்னும் 11 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 8 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ள பார்சிலோனா, கோப்பையை வெல்வது உறுதி என ஆரூடம் சொல்கின்றனர் கால்பந்து ஆர்வலர்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP