மெஸ்ஸி - ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது! 

நேற்றைய நாக் அவுட் ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா, ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணிகள் தோல்வியைச் சந்தித்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 | 

மெஸ்ஸி - ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது! 

நேற்றைய நாக் அவுட் ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா, ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணிகள் தோல்வியைச் சந்தித்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ரஷ்யாவில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாக்அவுட் சுற்றுக்கு எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த தமிழகத்தில், கால்பந்து பற்றிய ஆர்வம் குறைவுதான். கால்பந்து என்றாலே பொதுமாக நமக்குத் தெரிந்தது எல்லாம் மெஸ்ஸி, ரொனால்டோ என்று பிரபல கால்பந்து வீரர்கள் மட்டுமே. இந்த இருவரும் இடம்பெற்றுள்ள அணிகள் நேற்றைய நாக் அவுட் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்து வெளியேறி உள்ளன. இதனால், கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

நேற்று நடந்த முதல் நாக் அவுட் போட்டியில் அர்ஜெண்டினாவை பிரான்ஸ் எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தில், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இரண்டாவது நாக்அவுட் போட்டியில் போர்ச்சுக்கலை எதிர்த்து உருகுவே விளையாடியது. இதில், தொடக்கம் முதலே உருகுவே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடத்தில் உருகுவே அணியின் எடிசன் கவானி ஒரு கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் உருகுவே முன்னிலை பெற்றது. போர்ச்சுக்கல் கோல் அடிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தது. எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால், கிட்டத்தட்ட உருகுவே வெற்றி என்பது போன்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் பெப்பே ஒரு கோல் அடித்தார். 

இதைத் தொடர்ந்து இரு அணிகளுமே வெற்றிக்கான கோலை அடிக்கத் தீவிர முயற்சி செய்தன. ஆனால், உருகுவே அணியின் கவானி ஒரு கோல் அடித்து உருகுவேவை முன்னிலை பெறச் செய்தார். இதனால், உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதனால், கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை உருகுவே எதிர்கொள்கிறது. மெஸ்ஸி, ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்று ஆசையாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP