பட்டையை கிளப்பிய மெஸ்ஸி.... நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா!

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் விளிம்பில் இருந்த அர்ஜென்டினா, நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் உதவியுடன் நைஜீரியாவை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 | 

பட்டையை கிளப்பிய மெஸ்ஸி.... நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா!

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் விளிம்பில் இருந்த அர்ஜென்டினா, நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் உதவியுடன் நைஜீரியாவை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் ஐஸ்லாந்துடன் டிரா செய்தும், குரேஷியாவுடன் தோற்றும் சொதப்பியது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி, அகுவேரோ, டிபாலா போன்ற பல சூப்பர் வீரர்கள் இருந்தாலும், அர்ஜென்டினா கோல் அடிக்க திணறியது. குரேஷியாவிடம் 3-0 என அர்ஜென்டினா தோற்றது கால்பந்து உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி, நேற்று நடந்தது. அதில் அர்ஜென்டினா நைஜீரியாவுடன் மோதியது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோற்றும் இருந்த நைஜீரியா. அர்ஜென்டினாவை வீழ்த்தினால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் விளையாடியது.

ஆனால், ஆரம்பம் முதல் அர்ஜென்டினா முழு ஆதிக்கம் செலுத்தியது. மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா வீரர்கள் நைஜீரிய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். போட்டியின் 14வது நிமிடத்தின் போது, அர்ஜென்டினாவின் பனேகா கொடுத்த ஒரு சூப்பர் பாஸ் மெஸ்ஸியிடம் வந்தது. அதை தனது தொடையால் கட்டுப்படுத்தி, அட்டகாசமான கோல் அடித்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்று முதல் பாதி முடிந்தது. 

இரண்டாவது பாதியில், அர்ஜென்டினா சிறிது நேரம் அழுத்தம் கொடுக்காமல் விளையாடியது. 52வது நிமிடத்தின் போது, அர்ஜென்டினாவின் மாஸ்கெரானோ, ஒரு பவுல் செய்ய, நைஜீரியாவுக்கு பெனால்டி கிடைத்தது. அதில் விக்டர் மோசஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். நடுவில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பில் மெஸ்ஸி அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. 

ஆட்டம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த போது, மெர்காடோ கொடுத்த பாஸை, டிபென்ஸ் வீரர் மார்கோஸ் ரோஜோ கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றி பெற உதவினார். 

இந்த வெற்றியால், குரூப் டி-யில் முதலிடத்தில் குரேஷியா நீடிக்கிறது. அர்ஜென்டினா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முன்னதாக இதே குருப் டி-யில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா, ஐஸ்லாந்தை 2-1 என வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP