ஹல்க்குடன் கால்பந்து விளையாடும் மெஸ்ஸி: வைரல் வீடியோ

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாடும் கியூட் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

ஹல்க்குடன் கால்பந்து விளையாடும் மெஸ்ஸி: வைரல் வீடியோ

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாடும் கியூட் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா க்ளப் அணிக்காக அசத்தலாக விளையாடி, ஸ்பானிஷ் கோப்பையை கைப்பற்றினார். ஆனால், தனது தேசிய அணியான அர்ஜென்டினாவை உலகக் கோப்பை வெல்ல வைக்கும் மெஸ்ஸியின் கனவு, கடந்த மாதம் தவிடு பொடியானது. இதையடுத்து ஆழ்ந்த சோகத்தில் இருந்த மெஸ்ஸி, தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார். முன்னதாக ஐபிஸா நாட்டில், டென்னிஸ் சாம்பியன் ரபேல் நாடாலுடன் மெஸ்ஸி காணப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், தற்போது மெஸ்ஸி தனது நாய்க்குட்டி 'ஹல்க்'குடன் கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. 2.5 ஆண்டுகளுக்கு முன், சின்ன குட்டியாக இருந்த ஹல்க், இப்போது நிஜ ஹல்க் போல தோற்றமளிக்கிறது. என்னதான் பெரிதாக வளர்ந்தாலும், கால்பந்து சிங்கம் மெஸ்ஸியிடம் இருந்து பந்தை வாங்க முடியுமா என்ன? பாய்ந்து, பாய்ந்து பந்தை பிடுங்க ஹல்க் முயற்சிக்க, அதை மெஸ்ஸி அசால்ட்டாக ஏமாற்றி தனது கால்பந்து வித்தைகளை காட்டுகிறார். பின்னணியில் மனைவி மற்றும் குழந்தைகள் இதை பார்த்து கைதட்டி உற்சாகப் படுத்துகின்றனர். இதை மெஸ்ஸியின் மனைவி ஆன்டோனெல்லா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது, பேஸ்புக், யூடியூப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP