அர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.
 | 

அர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. 

அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கால்பந்தில் இருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்தார். 2014ம் உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததை தொடர்ந்து, மெஸ்ஸிக்கு தொடரின் சிறந்த வீரர் விருது கிடைத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற கோபா அமெரிக்க போட்டிகளில் அர்ஜென்டினா மீண்டும் இறுதி போட்டி வரை சென்று தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். 

அதன்பின், ரசிகர்கள் மெஸ்ஸிக்கு ஆதரவாக குரல் எழுப்பி திரும்பி வர வலியுறுத்தினர். 2018 உலகக் கோப்பைக்காக அணிக்கு திரும்பிய மெஸ்ஸி, சிறப்பாக விளையாடினார். ஆனால், பயிற்சியாளர் சொதப்பியதால், அணி மோசமாக தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சிறிது காலம் அணியில் இருந்து விலகி இருக்க போவதாக தெரிவித்தார். அதன்பின் அர்ஜென்டினா பங்கேற்ற போட்டிகளில் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், அர்ஜென்டினா அணி, பரம எதிரிகளான பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுடன் மோதுகிறது. பிரேசிலுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மெஸ்ஸி இதை போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP