மெஸ்ஸி மேஜிக்கில் கந்தலானது டாட்டன்ஹேம்!

டாட்டன்ஹேம் பார்சிலோனா அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அதிரடியில் 4-2 என வெற்றி பெற்றது பார்சிலோனா.
 | 

மெஸ்ஸி மேஜிக்கில் கந்தலானது டாட்டன்ஹேம்!

டாட்டன்ஹேம் பார்சிலோனா அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அதிரடியில் 4-2 என வெற்றி பெற்றது பார்சிலோனா. 

லண்டன் வெம்ப்லி மைதானத்தில், ஸ்பெயின் நாட்டின் ஜாம்பவான் பார்சிலோனா, இங்கிலாந்தின் டாட்டன்ஹேமுடன் மோதியது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையில், களமிறங்கிய பார்சிலோனா, போட்டி துவங்கி 2வது நிமிடத்திலேயே கோல் அடித்தது. மைதானத்தின் நடுவே இருந்து மெஸ்ஸி கொடுத்த ஒரு சூப்பர் பாஸை தடுக்க, டாட்டன்ஹேம் அணியின் கோல் கீப்பர் லாரிஸ் அவசரப்பட்டு வெளியே வந்தார். அப்போது, பந்தை வாங்கிய ஜோர்டி ஆல்பா, குட்டினோவுக்கு பந்தை பாஸ் செய்ய, அவர் கோல் அடித்தார். 

அதன் பின், 28வது நிமிடத்தில், மீண்டும் மெஸ்ஸி கொடுத்த ஒரு பாஸ், கோல் கீப்பர் அருகே இருந்த சுவாரஸ் கால்களில் விழுந்தது, அதை அவர் குட்டினோவுக்கு பாஸ் செய்ய முயற்சிக்க பந்து சிதறியது. வெளியே வந்த பந்தை, வாலி கிக் செய்து மின்னல் வேக கோல் அடித்தார் ராக்கிடிச். 2-0 என பார்சிலோனா முன்னிலை பெற முதல் பாதி முடிந்தது.

இரண்டாவது பாதியில், டாட்டன்ஹேமின் ஹேரி கேன் சூப்பர் கோல் அடித்தார்.  அப்போது மெஸ்ஸி அடித்த பந்து இரண்டு முறை கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. விடா முயற்சி செய்த மெஸ்ஸி, 56வது நிமிடம் கிடைத்த பாசை கோலுக்குள் தள்ளினார். 66வது நிமிடம், டாட்டன்ஹேமின் லமேலா கோல் அடிக்க, போட்டி 3-2 என இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் டாட்டன்ஹேம் வீரர்கள் மீண்டும் செய்த தவறால், தனியே நின்ற மெஸ்ஸி கால்களில் பந்து விழுந்தது. கோல் கீப்பர் மட்டும் எதிரே நிற்க, எளிதாக தனது இரண்டாவது கோலை அடித்து, போட்டியை 4-2 என முடித்து வைத்தார் மெஸ்ஸி. 

முதல் போட்டியில், பிஎஸ்வி அணியை பார்சிலோனா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP