மான்செஸ்டர் யுனைடெட் தான் கெத்து!

உலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வாகி உள்ளது.
 | 

மான்செஸ்டர் யுனைடெட் தான் கெத்து!

உலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வாகி உள்ளது.

உலகளவில் அதிகம் ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. அதிலும் கிளப் அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம். கால்பந்து கிளப் அணிகளை பொறுத்தவரை பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணிகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்தரிகை வெளியிட்டுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அணியின் மதிப்பு 4.12 பில்லியன் கோடியாக உள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடியாகும்.  கடந்த கால்பந்து சீசனில் இந்த அணியின் மதிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

4.08 பில்லியன் டாலர்களுடன் உடன் ரியல் மாட்ரிட், 4.06 பில்லியன் டாலருடன் பார்சிலோனா அணியும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பேயர்ன் முனிச் (3.06 பில்லியன் டாலர்), மான்செஸ்டர் சிட்டி (2.47 பில்லியன் டாலர்), அர்செனல் (2.23 பில்லியன் டாலர்), செல்சியா (2.06 பில்லியன் டாலர்), லிவர்பூல் (1.94 பில்லியன் டாலர்), யுவான்டஸ் (1.47 பில்லியன் டாலர்), டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (1.23 பில்லியன் டாலர்) அணிகள் உள்ளன.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP