1. Home
  2. விளையாட்டு

மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் சான்செஸ்ஸுக்கு சிறை தண்டனை!

மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் சான்செஸ்ஸுக்கு சிறை தண்டனை!


பிரிட்டன் நாட்டின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைட்டட்டின் நட்சத்திர வீரர் அலெக்சிஸ் சான்செஸ்ஸுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வந்த சான்செஸ், 4 வருடங்களுக்கு முன், இங்கிலாந்து நாட்டின் ஆர்சனல் அணிக்கு மாறினார். பார்சிலோனாவில் இருந்த போது, வரி ஏய்ப்பு செய்ய, போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆர்சனல் அணியில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு சான்செஸ் மாறினார். இந்நிலையில், பார்சிலோனாவில் அவருக்கு எதிராக நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளார் நீதிபதி.

ஸ்பெயின் நாட்டின் சட்டத்தின் படி, சிவில் குற்றங்களில் 2 வருடங்களுக்கும் குறைவான தண்டனை வழங்கப்பட்டால், அவர்கள் சிறை செல்ல தேவையில்லை. வேறு எந்த தவறும் செய்யாமல் நீதிபதி சொன்ன பொது சேவையை செய்து வந்தால், சிறை செல்லாமல், அபராத தொகையை மட்டும் கட்டிவிட்டு வெளியே இருக்கலாம். அதனால் சான்செஸ் அபராத தொகையை கட்டினால் போதும் என கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like