செல்சியை நாக்அவுட் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்!

இங்கிலாந்தின் க்ளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் எப்.ஏ கோப்பையில், மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் செல்சி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், நட்சத்திர வீரர் போக்பாவின் அட்டகாசத்தால், யுனைட்டட் 2-0 என வெற்றி பெற்றது.
 | 

 இங்கிலாந்தின் பிரபல கால்பந்து க்ளப் அணிகள் விளையாடும் எப்.ஏ கோப்பையின் 5வது சுற்று போட்டி, நேற்று நடைபெற்றது. லண்டனை சேர்ந்த செல்சியுடன் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணி மோதியது. தொடர் வெற்றிகளால் நல்ல பார்மில் இருக்கும் யுனைட்டட், தடுமாறி வரும் செல்சியை எதிர்கொண்டது. இந்த ஆண்டில், இரண்டு அணிகளுமே இந்த ஒரு கோப்பையை மட்டுமே வெல்வதற்கு வாய்ப்புள்ளதால், கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சொந்த மண்ணிலேயே செல்சி அணி மோசமான துவக்கம் பெற்றது. செல்சி வீரர்கள் தடுமாற, மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் எளிதாக கோல் வாய்ப்புகளை உருவாக்க தொடங்கினர். 31வது நிமிடத்தில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் நட்சத்திர வீரர் போக்பா கொடுத்த சூப்பரான பாஸில், அந்த அணியின் ஹெரேரா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து மான்செஸ்டர் சிறப்பாக விளையாடி அட்டாக் செய்து வந்தது.

முதல் பாதி முடியும் நேரத்தில், யுனைட்டட் அணியின் ராஷ்போர்டு கொடுத்த பாஸை, போக்பா தலையால் முட்டி கோல் அடித்தார். கடைசிவரை செல்சி அணியால் யுனைட்டட் டிபென்சை தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. 2-0 என வெற்றி பெற்று செல்சியை நாக் அவுட் செய்தது யுனைட்டட்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP