மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி!

மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி!
 | 

மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி!


இங்கிலாந்து நாட்டின் எஃப்.ஏ கோப்பை 5வது சுற்று போட்டியில், நேற்று பலம்வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி அணி, சிறிய அணியான வீகன் அத்லெடிக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

எல்லா போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மான்செஸ்டர் சிட்டி அணி, இதுவரை இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோற்றிருந்தது. முதல்நிலை பிரீமியர் லீக்கில் விளையாடும் மான்செஸ்டர் சிட்டி, 3வது நிலை லீக்கில் விளையாடும் வீகன் அணியுடன் மோதியது. துவக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்தியது மான்செஸ்டர் சிட்டி.

போட்டியின் 83% நேரம் பந்தை தன் வசத்தில் வைத்து அந்த அணி விளையாடியது. 29 வாய்ப்புகளை சிட்டி அணியினர் உருவாக்கினாலும், எதிலும் கோல் அடிக்க முடியவில்லை. முழுவதும் தடுப்பு ஆட்டம் ஆடியது வீகன். முதல் பாதி முடியும் போது, மான்செஸ்டர் சிட்டி அணியின் டெல்ஃப் , ரெட் கார்டு கொடுத்து நீக்கப்பட்டார். இது போட்டியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இரண்டவது பாதி முழுவதும் 10 பேருடன் விளையாடியது சிட்டி அணி. 78வது நிமிடத்தின் போது, சிட்டி அணியின் வாக்கர் செய்த தவறால், வீகன் அணியின் வில் க்ரிக்ஸ் கோல் அடித்தார். அதன்பின் சிட்டி அணியால் கோல் அடிக்க முடியாமல், 1-0 என தோற்று வெளியேறியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP