3 பிரீமியர் லீக் சாதனைகளை முறியடித்தது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில், பிரைட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில், 97 புள்ளிகளை பெற்று, பிரீமியர் லீக் சாதனையை முறியடித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி.
 | 

3 பிரீமியர் லீக் சாதனைகளை முறியடித்தது மான்செஸ்டர் சிட்டி

3 பிரீமியர் லீக் சாதனைகளை முறியடித்தது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில், பிரைட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில், 97 புள்ளிகளை பெற்று, 3 பிரீமியர் லீக் சாதனைகளை முறியடித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி.

கடந்த மாதம் 15ம் தேதி, மான்செஸ்டர் சிட்டி, சர்வதேச கல்பந்தின் சிறந்த க்ளப் போட்டியாக கருதப்படும் இங்கிலாந்து பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. சீசன் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி எதிரணிகளை பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி, நூறு கோல்கள் அடித்து அசத்தியது. 

38 போட்டிகள் கொண்ட பிரீமியர் லீக் சரித்திரத்திலேயே, 2005ம் ஆண்டு செல்சி அணி பெற்ற 95 புள்ளிகள் தான் அதிகபட்ச சாதனையாக இருந்தது. நேற்று பிரைட்டனுடன் மோதிய சிட்டி, அந்த சாதனையை முறியடித்தது. 

16வது நிமிடத்தில் டேனிலோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால்,  உடனடியாக பிரைட்டனின் உல்லோவா கோல் அடித்து சமன் செய்தார். 34வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா மற்றும் 72வது நிமிடத்தில் பெர்னாண்டினோ ஆகியோர் கோல் அடிக்க, 3-1 என சிட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியோடு, 97 புள்ளிகள் பெற்று செல்சியின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், அதே அணி வைத்திருந்த அதிக கோல் சாதனையையும் சிட்டி முறியடித்துள்ளது. 2010ம் ஆண்டு, செல்சி, 103 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது 105 கோல்கள் அடித்து அதை சிட்டி முறியடித்துள்ளது. மேலும், எதிரணிகளின் மைதானத்திற்கு சென்று அதிக போட்டிகள் வென்ற சாதனையையும் சிட்டி முறியடித்துள்ளது. 

இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், 100 புள்ளிகளை தொடும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP