டாட்டன்ஹேமை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, பலம்வாய்ந்த டாட்டன்ஹேமை, லண்டன் வெம்ப்லி மைதானத்தில் வைத்து 1-0 என வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. சிட்டியின் மாஹ்ரெஸ் கோல் அடித்தார்.
 | 

டாட்டன்ஹேமை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி!

இங்கிலாந்து பிரீமியர் தொடரின் சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, பலம்வாய்ந்த டாட்டன்ஹேமை லண்டன் வெம்ப்லி மைதானத்தில் வைத்து 1-0 என வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

பிரபல இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி, 4வது இடத்தில் இருந்த டாட்டன்ஹேமுடன் மோதியது. இரு பலம்வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போலவே நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி சூப்பர் துவக்கம் பெற்றது. சிட்டி கோல் கீப்பர் எடர்சன் தூரமாக அடித்த பந்தை கடத்திச் சென்ற ஸ்டெர்லிங், மாஹ்ரெஸுக்கு பாஸ் கொடுக்க, அதை அவர் கோலுக்குள் தள்ளி 1-0 என முன்னிலை கொடுத்தார்.

தொடர்ந்து சிட்டி அட்டாக் செய்து பல வாய்ப்புகளை உருவாக்கியது. டாட்டன்ஹேம் அணியும் அவ்வப்போது கோல் வாய்ப்புகளை உருவாக்கி, சிட்டிக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த அணியின் ஹேரி கேன் சிறப்பாக விளையாடினார். ஆனால், சிட்டி கோல்கீப்பர் எடர்சன் மற்றும் டாட்டன்ஹேம் கோல் கீப்பர் லாரிஸ் இருவரும் அற்புதமாக விளையாடி, பல கோல் வாய்ப்புகளை தடுத்தனர். இறுதியில் 1-0 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. 

10 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் நீடிக்க, டாட்டன்ஹேம் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP