2018ன் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்றார் லூக்கா மாட்ரிச்!

ஐரோப்பிய சாம்பியன் பட்டம், உலகக் கோப்பை இறுதிப் போட்டி, ஐரோப்பிய கண்டத்தின் சிறந்த வீரர் என பல பெருமைகளை கண்ட குரேஷிய வீரர் லூக்கா மாட்ரிச் இந்த ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராக, ஃபிபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 | 

குரேஷிய நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச், ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2017-18 சீசனில், ரியல் மாட்ரிட் அணிக்காக அசத்தலாக விளையாடிய மாட்ரிச், அந்த அணி தொடர்ந்து 3வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல பக்க பலமாக இருந்தார். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில், யாருமே எதிர்பார்க்காத குரேஷிய அணி, அர்ஜென்டினா, இங்கிலாந்து போன்ற பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி, இறுதி போட்டி வரை சென்றது. இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்தது. 

ஆனாலும், உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருதை மாட்ரிச் பெற்றார். அதேபோல, ஐரோப்பிய கண்டத்தின் சிறந்த வீரர் என்ற விருதையும் பெற்றார். சர்வதேச கால்பந்து கழகம் ஃபிபா ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இறுதி பட்டியலில்,மாட்ரிச், ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த ரொனால்டோ, மற்றும் லிவர்பூல் அணிக்காக விளையாடும் எகிப்து வீரர் முஹம்மது சாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் மாட்ரிச் விருதை வென்றார். கடந்த 10 ஆண்டுகளில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு வீரர்களும் இந்த விருதை ஆளுக்கு ஐந்து முறை வென்ற நிலையில், இருவர் தவிர மூன்றாவது ஆளாக மாட்ரிச் முதல்முறையாக இந்த விருதை வென்றுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP