பட்டையை கிளப்பிய முஹம்மது சாலா: 5-2 என வென்றது லிவர்பூல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில், ரோமாவுடன் மோதிய லிவர்பூல், நட்சத்திர வீரர் முஹம்மது சாலாவின் அதிரடியால் 5-2 என வெற்றி பெற்றது.
 | 

பட்டையை கிளப்பிய முஹம்மது சாலா: 5-2 என வென்றது லிவர்பூல்

பட்டையை கிளப்பிய முஹம்மது சாலா: 5-2 என வென்றது லிவர்பூல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில், ரோமாவுடன் மோதிய லிவர்பூல், நட்சத்திர வீரர் முஹம்மது சாலாவின் அதிரடியால் 5-2 என வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட அரையிறுதி சுற்றின் முதல் போட்டி, லிவர்பூலில் உள்ள ஆன்பீல்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய லிவர்பூல், பல கோல்  வாய்ப்புகளை உருவாக்கியது. 

அருமையான பார்மில் உள்ள லிவர்பூலின் நட்சத்திர வீரர் முஹம்மது சாலா, 35வது நிமிடத்தில், சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், 45வது நிமிடத்தில், பிர்மீனோ கொடுத்த பாசை, கோல்கீப்பரை தாண்டி தூக்கி அடித்து கோலாக்கி அசத்தினார் சாலா. 

இரண்டாவது பாதியில், சாலா கொடுத்த ஒரு பாசில், மானே கோல் அடித்தார். 61 மற்றும் 68வது நிமிடங்களில் பிர்மீனோ கோல் அடிக்க, 5-0 என முன்னிலை பெற்றது லிவர்பூல். 

மோசமான தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த ரோமா, கடைசி 10 நிமிடங்களில் விழித்துக் கொண்டது. 81வது நிமிடத்தில், ஜெக்கோ கோல் அடிக்க, ரோமா, அதன்பின் முழுமையாக தாக்கி ஆடியது. அதற்கு பலனாக 85வது நிமிடத்தில் ரோமா வீரர் அடித்த பந்து லிவர்பூலின் மில்னர் கையில் பட்டது. ரெஃப்ரீ ரோமாவுக்கு பெனால்டி கொடுத்தார். அதை அந்த அணியின் பெராட்டி கோலாக்கினார். 5-2 என போட்டி முடிந்தது. 

ரோமாவில் நடைபெறும் அடுத்த போட்டியில், ரோமா குறைந்தபட்சம் 3-0 என ஜெயிக்க வேண்டும். அதே நேரம், ரோமாவில் லிவர்பூல் ஒரு கோல் அடித்தால் கூட, பதிலுக்கு அந்த அணி 5 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அடுத்த வாரம் புதனன்று, இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP