1. Home
  2. விளையாட்டு

கடைசி நிமிட த்ரில் வெற்றி; கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது பிரேசில்

கடைசி நிமிட த்ரில் வெற்றி; கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது பிரேசில்

கோஸ்டா ரிகாவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது பிரேசில்.

குரூப் சுற்றின் முதல் போட்டியில் ஸ்விட்சர்லாந்துடன் மோதிய பிரேசில், 1-1 என டிரா செய்திருந்தது. நட்சத்திர வீரர்கள் நிரம்பி வழியும் பிரேசில் அணி, முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. ஸ்விட்சர்லாந்துடன் கோல் அடிக்க கடுமையாக போராடியது.

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், கோஸ்டா ரிகாவுடன் பிரேசில் மோதியது. எதிரணிகளை கோல் அடிக்க விடாமல் செய்து, கடந்த உலகக் கோப்பையின் காலிறுதி வரை சென்ற கோஸ்டா ரிகா, இந்த முறை முதல் போட்டியிலேயே தோற்றது. அடுத்த போட்டியில் தோற்றால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலையில்,பிரேசிலுடன் மோதியது.

பிரேசில் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. நெய்மார், குட்டினோ ஆகியோர் கோஸ்டா ரிகாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். முதல் பாதி கோல் எதுவதும் அடிக்காமல் முடிந்தது. கோஸ்டா ரிகா வீரர்களும், பிரேசிலுக்கு தொடர்ந்து கவுன்ட்டர் அட்டாக் மூலம் நெருக்கடி கொடுத்தனர். கோல் இல்லாமல் போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

91வது நிமிடத்தின் போது பிரேசில் செய்த அட்டாக்கின் பலனாக குட்டினோ கால்களில் பந்து விழுந்தது. அவர் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை கொடுத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் அட்டாக் செய்த பிரேசிலுக்கு, நெய்மார் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.

தொடர்ந்து இரண்டாவது முறை தோற்றதால், கோஸ்டா ரிகா உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like