குங்ஃபு - கால்பந்து வீரர் ஸ்லாட்டான் உலகக் கோப்பைக்கு முழுக்கு!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச், உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கால்பந்து கழகம் உறுதி செய்துள்ளது.
 | 

கால்பந்து உலகிலேயே எல்லோருக்கும் பிடித்த ஒரு வீரர் என்றால் அது ஸ்லாட்டான் தான். கராத்தே, குங்ஃபு தெரிந்த அவர், அடிக்கும் சாகச கோல்களை யாராக இருந்தாலும் மெய்மறந்து ரசிப்பார்கள். பிட்ச்சில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும், "என்னை விட சிறந்த வீரர் வேறு யாருமில்லை" என வெளிப்படையாகவே பேசும் அவரது திமிருக்கும் பல ரசிகர்கள் உண்டு. 

36 வயதான அவர், கால்பந்தில் இருந்து இன்னும் ஒருசில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வயதாகி வருவதால், ஐரோப்பிய கால்பந்தில் அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால், அமெரிக்கா சென்றார். அங்குள்ள எல்.ஏ கேலக்சி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே, தனது வழக்கமான குங்ஃபு ஸ்டைலில் ஒரு கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

ஸ்வீடன் நாட்டின் நட்சத்திர வீரராக வலம் வந்த ஸ்லாட்டானுக்கு, சமீப காலமாக தேசிய அணியில் பெரிய அளவு பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் அவர் விளையாடும் ஃபார்மை பார்த்துவிட்டு, உலகக்கோப்பைக்கான அணியில் மீண்டும் அவரை சேர்ப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஸ்லாட்டான், உலகக் கோப்பைக்கான ஸ்வீடன் அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என ஸ்லாட்டான் கோரிக்கை வைத்துள்ளாராம். இது அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP