கரபாவ் கோப்பை: செல்சியை வீழ்த்தியது டாட்டன்ஹேம்!

இங்கிலாந்து நாட்டின் கரபாவ் கால்பந்து கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், நேற்று செல்சி டாட்டன்ஹேம் அணிகள் மோதிய போட்டியில், நட்சத்திர வீரர் ஹேரி கென் உதவியால், டாட்டன்ஹேம் 1-0 என வெற்றி பெற்றது.
 | 

கரபாவ் கோப்பை: செல்சியை வீழ்த்தியது டாட்டன்ஹேம்!

இங்கிலாந்து நாட்டின் கரபாவ் கால்பந்து கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், நேற்று செல்சி டாட்டன்ஹேம் அணிகள் மோதிய போட்டியில், நட்சத்திர வீரர் ஹேரி கென் உதவியால், டாட்டன்ஹேம் 1-0 என வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கால்பந்தின் மூன்றாவது மிகப்பெரிய கோப்பையான கரபாவ் கப் என அழைக்கப்படும் லீக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் செல்சி - டாட்டன்ஹேம் அணிகள் நேற்று மோதின. இரண்டு போட்டிகளாக நடைபெறும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டி, டாட்டன்ஹேம் அணியின் வெம்பலி மைதானத்தில் நடைபெற்றது. பரம எதிரிகளான இந்த இரண்டு அணிகளும், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் விடாமுயற்சி செய்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

26வது நிமிடத்தின் போது, டாட்டன்ஹேம் அணியின் ஹரி கேன், பந்தை கடத்திச் சென்று கோல் அடிக்க முயற்சித்தார். அப்போது செல்சி கோல்கீப்பர் அவசரப்பட்டு கேனை ஃபவுல் செய்தார். இதனால் டாட்டன்ஹேம் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹேரி கேன் கோலடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தீவிரமாக பல வாய்ப்புகளை உருவாக்கினர். ஆனால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. டாட்டன்ஹேம் 1- என வெற்றி பெற்றது. 

முதல் அரையிறுதி போட்டியில் 1-0 டாட்டன்ஹேம் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி, செல்சி அணியின் ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளில் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ, அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP