ஐஎஸ்எஸ்: விறுவிறுப்பான நார்த்ஈஸ்ட் - கோவா போட்டி டிரா!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் கோவா அணிகள் மோதிய விறுவிறுப்பான 3வது போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
 | 

ஐஎஸ்எஸ்: விறுவிறுப்பான நார்த்ஈஸ்ட் - கோவா போட்டி டிரா!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் கோவா அணிகள் மோதிய விறுவிறுப்பான 3வது போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் கொல்கத்தாவை, கேரளா வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் சென்னையை பெங்களூரு தோற்கடித்தது. 3வது போட்டியில், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி,  பலம்பாய்ந்த கோவாவை எதிர்கொண்டது. 

விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே கோவா அணிக்கு ஷாக் காத்திருந்தது. 8வது நிமிடத்தின் போது, கோவாவின் கோல் கீப்பர் நவாஸ், எதிரணி வீரர் ஆப்சைடில் இருந்தார் என நினைத்து, அவசரப்பட்டு வெளியே வந்து பந்தை கையால் பிடித்தார். இதைத் தொடர்ந்து நடுவர், ப்ரீ கிக் வாய்ப்பை கொடுத்தார். ஒன்றும் புரியாத கோல் கீப்பர், தனது தவறை புரிந்துகொள்ளும் முன், நார்த்ஈஸ்ட் அணியின் கல்லேகோ ப்ரீ கிக்கை கண நேரத்தில் தூக்கி அடித்து கோலுக்குள் தள்ளினார். அடுத்த சில நிமிடங்களிலேயே, கோவாவின் நட்சத்திர வீரர் கோரோமினாஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 

38வது நிமிடத்தின் போது, கோரோமினாஸ் மீண்டும் சிறப்பாக விளையாடி, பந்தை 4 வீரர்களை தாண்டி கடத்திச் சென்று சூப்பர் கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கோவா 2-1 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில், நார்த்ஈஸ்ட் அணி, முழு ஆதிக்கம் செலுத்தி கோல் அடிக்க முயற்சி செய்தது. 53வது நிமிடத்தில், கோவாவின் ஓக்பெச்சே கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டியை வெல்ல விடாமுயற்சி செய்து, பல வாய்ப்புகளை உருவாக்கியது நார்த்ஈஸ்ட். ஆனால், கோவா கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு வாய்ப்புகளை தடுத்தார். இறுதியில் போட்டி 2-2 என டிரா ஆனது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP