ஐ.எஸ்.எல்: கேரளாவை வீழ்த்தியது சூப்பர் பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பெங்களுரு எஃப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் அசத்தி வரும் பெங்களூரு அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 | 

ஐ.எஸ்.எல்: கேரளாவை வீழ்த்தியது சூப்பர் பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பெங்களுரு எஃப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் அசத்தி வரும் பெங்களூரு அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இந்த ஆண்டின் ஐஎஸ்எல் தொடரில், 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு எஃப்.சி அணி, 3 வெற்றி ஒரு டிரா என சூப்பர் பார்மில் இருந்தது. 4 டிரா, ஒரே ஒரு வெற்றி என 6வது இடத்தில் உள்ள கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியுடன் பெங்களூரு மோதிய போட்டி கொச்சின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது. 

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி, இந்த போட்டியிலும் முழு ஆதிக்கம் செலுத்தியது. 17வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து பெங்களூருக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால், 30வது நிமிடத்தின் போது,  கேரளாவின் சஹல் சமட்டை, பெங்களூரு டிபென்ஸ் வீரர் பெனால்டி பாக்ஸுக்குள் வைத்து பவுல் செய்தார். ரெப்ரீ பெனால்டி வழங்க, கேரளாவின் ஸ்டோஜானோவிச் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இரு அணிகளும் தொடர்ந்து பல வாய்ப்புகளை உருவாக்கினர். ஆனால், கோல் விழவில்லை. 

80வது நிமிடத்தின் போது பெங்களூரு வீரர் ஜிஸ்க்கோ அடித்த ஷாட்டை, கேரளா கோல் கீப்பர் நவீன் தடுத்தார். ஆனால், பந்து கேரள வீரர் மேல் பட்டு எதிர்பாராமல் கோலுக்குள் சென்றது. ஓன் கோல் மூலம் 2-1 என வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோற்காத தனது சாதனையை தக்க வைத்துக் கொண்டது பெங்களூரு. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP