ஐ.எஸ்.எல் அரையிறுதி போட்டி: புனே - பெங்களூரு டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி நேற்று நடந்தது. லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணி, புனேவுடன் முதல் அரையிறுதி போட்டியில் மோதியது. இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த அரையிறுதி சுற்றின் முதல் போட்டி, புனேவில் நடைபெற்றது.
 | 

இந்த போட்டியின் முதல் பாதியில் பெங்களூரு அணி முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. ஆனால், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் புனே அணி சிறப்பாக விளையாட, அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால்,  புனேவாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், கோல் எதுவும் இல்லாமல் போட்டி டிரா ஆனது. அடுத்து பெங்களூரில் நடக்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு செல்லும்.

மற்றொரு அரையிறுதி போட்டியில், சென்னையின் எஃப்.சி அணியுடன் கோவா மோதுகிறது. இந்த போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP