ஐ.எஸ்.எல் அரையிறுதி: சென்னையின் எஃப்.சி முன்னிலை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், நேற்று சென்னையின் எஃப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின. இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் முதல் போட்டி, கோவாவில் உள்ள, ஃபதோர்டா மைதானத்தில் நடந்தது.
 | 

ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 64வது நிமிடத்தின் போது, கோவாவின் லான்சரோடே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கோவாவின் கோரோமினா, சென்னை வீரர்கள் 3 பேரை தாண்டி பந்தை அடிக்க, அதை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது அருகே இருந்த லான்சரோடேவிடம் செல்ல அவர் எளிதாக கோல் அடித்தார்.

5 நிமிடங்கள் மட்டுமே கோவா முன்னிலையில் இருந்தது. 71வது நிமிடத்தில் சென்னை அணியின் க்ரெகரி நெல்சன் கொடுத்த பாஸை, அனிருத் தாபா கோலாக்கினார். இறுதியில் போட்டி 1-1 என முடிந்தது. இந்த சுற்றின் அடுத்த போட்டி 13ம் தேதி சென்னையில் நடக்கிறது.

ஐ.எஸ்.எல் தொடரில் இந்த ஆண்டு 'அவே கோல் விதி' சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, அரையிறுதியின் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளும் ஒரே அளவு கோல்கள் அடித்திருந்தால், எந்த அணி எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்கள் அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெறும். இதனால், இந்த போட்டியில் கோவா சென்று ஒரு அடித்துள்ள சென்னையின் எஃப்.சி, அடுத்து சென்னையில் நடக்கும் போட்டியில் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என டிரா செய்தால் போதும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP