ஐ.எஸ்.எல்: நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது மும்பை

நேற்று நடந்த ஐ.எஸ்.எல் லீக் போட்டியில், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியுடன் மும்பை எஃப்.சி மோதியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இந்த போட்டியில் மும்பை அணி நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. கடைசி இடத்தில் உள்ள நார்த்ஈஸ்ட் அணி, பிளே ஆப் சுற்று வாய்ப்பை போட்டிகளுக்கு முன்பே இழந்துவிட்டது.
 | 

ஐ.எஸ்.எல்: நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது மும்பை


நேற்று நடந்த ஐ.எஸ்.எல் லீக் போட்டியில், நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியுடன் மும்பை எஃப்.சி மோதியது. 

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இந்த போட்டியில் மும்பை அணி நிச்சயம்  வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. கடைசி இடத்தில் உள்ள நார்த்ஈஸ்ட் அணி, பிளே ஆப் சுற்று வாய்ப்பை பல போட்டிகளுக்கு முன்பே இழந்துவிட்டது. 

15வது நிமிடத்தில் மும்பை அணியின் எமானா கோல் அடித்து மும்பைக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே, மும்பையின் லூசியான் கோய்யன், தவறுதலாக தனது அணிக்கு எதிராகவே கோல் அடித்து  போட்டியை சமன் செய்தார். 

முதல் பாதி முடியும் நேரத்தில் மும்பையின் சம்பியான் கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். 2வது பாதியில், 54வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் அணியின் எவர்டன் சாண்டோஸ் கோல் அடித்து மீண்டும் சமன் செய்தார். போட்டி டிராவாக முடியும் என நினைத்தபோது, முதல் பாதியில் ஓன் கோல் அடித்த  கோய்யன், 90வது நிமிடத்தில் மும்பைக்கு கோல் அடித்து 3-2 என மும்பை வெற்றி பெற உதவினார். 

16 போட்டிகளில் 23 புள்ளிகள் எடுத்துள்ள மும்பை அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP