தொடங்கியது ஐ.எஸ்.எல்: முதல் போட்டியில் வெற்றி பெற்றது கேரளா!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 5வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி.
 | 

தொடங்கியது ஐ.எஸ்.எல்: முதல் போட்டியில் வெற்றி பெற்றது கேரளா!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 5வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. 

கிரிக்கெட்டுக்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடரை போல கால்பந்துக்கு இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கினறன. நேற்றை முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதின. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

 

 

இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் ஆலோசகரும் பங்குதாரருமான மோகன்லால் தனது சமூக வலைதளத்தில்  உற்சாகமாக பதிவிட்டுள்ளார். 

 

 

இன்று பெங்களுரு எப்.சி மற்றும் சென்னையின் எப்.சி  அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP