ஐ.எஸ்.எல்: ஜாம்ஷெட்பூர், கோவா வெற்றி

ISL: Jamshedpur and Goa win
 | 

ஐ.எஸ்.எல்: ஜாம்ஷெட்பூர், கோவா வெற்றி


நேற்று நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில், ஜாம்ஷெட்பூர் மற்றும் கோவா அணிகள் வெற்றி பெற்றன.

டெல்லி அணியுடன் மோதிய ஜாம்ஷெட்பூர், 3-2 என அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் டெல்லி அணியின் கலு உச்சே, 20வது மற்றும் 22வது நிமிடங்களில் சரசரவென இரண்டு கோல்களை போட்டு முன்னிலை கொடுத்தார். அதன்பின் விடாமல் போராடிய ஜாம்ஷெட்பூர் அணியின் வீரர் டிரி 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரண்டாவது பாதியில், 54வது நிமிடத்தின் போது ராஜு யும்னம் கோலடிக்க, போட்டி சமமானது. இறுதியாக, 86வது நிமிடத்தில் மத்யுஸ் ட்ரினிடாடே கோல் அடித்து ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற வைத்தார்.

கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியுடன் மோதிய கோவா 2-1 என்று வெற்றி பெற்றது. ஆட்டம் துவங்கிய 7வது நிமிடத்தில், கோவாவின் ஃபெர்ரன் கோரோமினாஸ் ஒரு கோல் அடித்து முன்னிலை கொடுக்க, 29வது நிமிடத்தில் கேரளாவின் சி.கே வினீத் சமன் செய்தார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தின் 77வது நிமிடத்தில், எடு பீடியா கோல் அடித்து கோவா வெற்றி பெற செய்தார்.

11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 21 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திலும், 20 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன. 10 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள கோவா, 19 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது ஜாம்ஷெட்பூர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP