ஐ.எஸ்.எல்: ஹூம் ஹேட்ரிக்; கேரளா சூப்பர் வெற்றி

ஐ.எஸ்.எல்: ஹூம் ஹேட்ரிக்; கேரளா சூப்பர் வெற்றி
 | 

ஐ.எஸ்.எல்: ஹூம் ஹேட்ரிக்; கேரளா சூப்பர் வெற்றி


நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல் போட்டியில், டெல்லி டைனமோஸ் அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் மோதியது. டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கேரளா 3-1 என அசத்தல் வெற்றி பெற்றது. 

கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, 8வது இடத்தில் இருந்த கேரளாவுடன் மோதியது. கனடாவை சேர்ந்த கேரளா அணியின் நட்சத்திர வீரர் இயன் ஹும், முதல் பாதியில் கோல் அடித்து கேரளாவுக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின், டெல்லியின் ப்ரீதம் கோடல், கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி 1-1 என முடிந்தது. 

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து அசத்திய கேரள அணியின் ஹும், 78வது மற்றும் 83வது நிமிடங்களில் கோல் அடித்து தனது ஹேட்ரிக்கை பூர்த்தி செய்தார். 9 போட்டிகளில் இரண்டு வெற்றி மட்டுமே பெற்றுள்ள கேரளா, 6வது இடத்திற்கு முன்னேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP