ஐ.எஸ்.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது கோவா; பிளே ஆப் பலப்பரீட்சை

நேற்று நடந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவா அணியுடன் அட்லெடிகோ டி கொல்கத்தா மோதியது.
 | 

ஐ.எஸ்.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது கோவா; பிளே ஆப் பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது கோவா; பிளே ஆப் பலப்பரீட்சை

நேற்று நடந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவா அணியுடன் அட்லெடிகோ டி கொல்கத்தா மோதியது.

பிளே ஆப் சுற்றுக்கு கோவா தகுதி பெற தொடர் வெற்றிகள் பெற வேண்டிய நிலையில், கடந்த போட்டியில் புனே அணியை 4-0 என வீழ்த்தியிருந்தது. கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில், கொல்கத்தாவுடன் நேற்று விளையாடியது. தொடர் தோல்விகளால் 9வது இடத்தில் தவித்து வருகிறது கொல்கத்தா. 

போட்டி துவங்கிய 10வது நிமிடத்திலேயே கோவாவின் செர்ஜியோ ஜூஸ்ட்டே கோல் அடித்தார். 15வது மற்றும் 21வது நிமிடங்களில் கோவாவின் புருனோ கோலடிக்க, 3-0 என்ற முன்னிலையோடு முதல் பாதியை கோவா முடித்தது.

இரண்டாவது பாதியில் 64வது நிமிடத்தில் கோவாவின் கோரோமினாஸ் கோல் அடித்தார். 87வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ராபி கீன் கோல் அடிக்க, 90வது நிமிடத்தில் கோவாவின் சிப்னியோஸ் கோல் அடித்தார். போட்டி 5-1 என  முடிந்தது.

இரு தினங்களுக்கு முன் நடந்த போட்டியில், பிளே ஆப் சுற்றில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட டெல்லி, மும்பையை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோனது.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் ஒன்றுடன் ஒன்று கடைசி போட்டியில் மோதுகின்றன. இதனால், 29 புள்ளிகளுடன் 2வது மற்றும் 3வது இடத்தில் முறையே உள்ள புனே மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

மொத்தம் உள்ள 4 பிளே ஆப் இடங்களில் பெங்களூரு, புனே, சென்னை ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், வரும் 4ம் தேதி கடைசி இடத்துக்கான போட்டியில் கோவாவுடன் ஜாம்ஷெட்பூர் மோதுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP