ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா
 | 

ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அட்லெட்டிக்கோ கொல்கத்தா அணியுடன் கோவா மோதிய போட்டி டிரா ஆனது.

கோவா விமான நிலையத்தில் மிக்-29k ரக விமானம் சறுக்கி விபத்துக்குள்ளானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமான நிலையம் முடக்கப்பட்டு, பல விமானங்கள் தாமதமாகின. அதன் காரணமாக கோவா வீரர்கள் கொல்கத்தா செல்ல முடியாமல் நீண்ட நேரம் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

பின்னர் இரண்டு மணி நேரம் தாமதமாக கொல்கத்தாவுக்கு அவர்கள் வந்தடைய, போட்டி நள்ளிரவு தான் முடிந்தது. 4வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணி கோல் அடித்து அசத்தியது. நட்சத்திர வீரர் ராபி கீன் கோலடித்து கொல்கத்தாவுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால, 24வது நிமிடத்தில் கோவாவின் பெரோமினாஸ்  கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் போட்டி 1-1 என்றே முடிந்தது.

போட்டியின் முடிவில், 9 புள்ளிகளுடன் கொல்கத்தா 7வது இடத்திலும், 13 புள்ளிகளுடன் கோவா 4வது இடத்திலும் உள்ளன. ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள சென்னையின் எப்.சி அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP