ஐ.எஸ்.எல்: கோவாவுக்கு செக் வைத்த டெல்லி டைனமோஸ்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோப்பை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன், ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 2 அல்லது 3 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
 | 

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், டெல்லி - கோவா அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை நழுவவிட்ட டெல்லி டைனமோஸ் அணி, 20 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றை குறிவைத்து வந்த கோவாவுடன் மோதியது. 

முதல் பாதி கோல் எதுவும் விழாமல் முடிந்தது. இரண்டாவது பாதியில், 53வது நிமிடத்தின் போது, கோவா அணியின் ஹுகோ பூமாஸ் கோல் அடித்தார். கோவா வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த நேரம், 81வது நிமிடத்தில் டெல்லி அணியன் கலு உச்சே கோல் அடித்தார். பல வாய்ப்புகளை தொடர்ந்து மிஸ் செய்ததால் கோவா அணி 1-1 என போட்டியை டிரா மட்டுமே செய்ய முடிந்தது.

இதனால், 15 போட்டிகளில் கோவா தற்போது 21 புள்ளிகள் எடுத்து 6வது இடத்தில் உள்ளது. அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கோவாவால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP