ஐ.எஸ்.எல்: டெல்லியை 2-2 என டிரா செய்தது சென்னையின் எப்.சி!

ஐ.எஸ்.எல்: டெல்லியை 2-2 என டிரா செய்தது சென்னையின் எப்.சி!
 | 

ஐ.எஸ்.எல்: டெல்லியை 2-2 என டிரா செய்தது சென்னையின் எப்.சி!


நேற்று சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.எஸ்.எல் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி, 3வது  இடத்தில் இருந்த சென்னையுடன் மோதியது. 6 போட்டிகளில் தோற்று மிக மோசமான நிலையில் டெல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் டெல்லி அணியின் டேவிட் இங்காயிட்டே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

அதன் பிறகு சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே, 2 கோல்கள் அடித்து சென்னைக்கு முன்னிலை கொடுத்தார். சென்னை அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் டெல்லியின் குயோன் பெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

போட்டி டிரா ஆனதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. டெல்லி கடைசி இடத்தில் நீடிக்க, சென்னை 2வது இடத்திற்கு முன்னேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP