ஐ.எஸ்.எல்: கோவாவிடம் வீழ்ந்தது சென்னையின் எஃப்.சி

சென்னையில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல் லீக் போட்டியில் எஃப்.சி கோவா அணி 3-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னையின் எஃப்.சி அணியை வீழ்த்தியது. தற்போது அந்த 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
 | 

5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில்  சென்னையின் எஃப்.சி, எஃப்.சி. கோவா அணிகள் மோதின.

இதில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 

கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார். இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தியது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் கோவா அணி முதல் இடத்தில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP