ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை!

சாம்பியன் பட்டத்தை மீட்டது சென்னையின் எஃப்.சி அணி. நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ஐ.எஸ்.எல் போட்டியில் சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
 | 

ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை!

ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை!இன்று நடந்த ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீட்டது சென்னையின் எஃப்.சி அணி. நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ஐ.எஸ்.எல் போட்டியில் சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி. ஆகிய அணிகள் இறுதிப்போட்டியை எட்டின. இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடந்தது. 

ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை!

ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடமே பெங்களூரு அணியின் சுனில் செத்ரி கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதைத்தொடர்ந்து சென்னையின் மெய்ல்சன் அல்வெஸ் 17-வது நிமிடத்திலும், 45-வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது. சென்னை ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணியின் ராபெல் அகஸ்டோ மற்றொரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து பெங்களூரு அணி கோல் அடித்துவிடாமல் சென்னை வீரர்கள் தடுத்துவந்தனர். இருப்பினும், 92-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்தார்.

கடைசியில், 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக சென்னையின் எப்.சி. அணி  சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை!

அதற்குள்ளாக, ஃபுட் பால்லயும் நாங்தான், கிரிக்கெட்லயும் நாங்கதான் என்று மீம்ஸ் பறக்க ஆரம்பித்துவிட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP