சர்வதேச பெண்கள் கால்பந்து: இந்தியாவுக்கு முதல் வெற்றி !

துருக்கியில் நடைபெற்று வரும் சர்வதேச கால்பந்து போட்டியில், நேற்றைய (வெள்ளிக்கிழமை) லீக் ஆட்டத்தில் இந்தியா 10-0 என்ற கோல்கணக்கில் துருக்மெனிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது.
 | 

சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி துருக்கியில் நடைபெற்று வருகிறது.  இதில் பங்கேற்றுவரும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இந்தியாவும் துருக்மெனிஸ்தானும் மோதின. இதில், இந்தியா 10-0 என்ற கோல்கணக்கில் துருக்மெனிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

முதல் ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல்கணக்கில் உஸ்பெக்கிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா, ருமேனியாவுடன் மோதுகின்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP