1. Home
  2. விளையாட்டு

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை 5வது முறையாக வென்று இந்திய மகளிர் சாதனை!

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை 5வது முறையாக வென்று இந்திய மகளிர் சாதனை!

மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேபாலுக்கு எதிராக மோதிய இந்திய மகளிர் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேபாளில் நடைபெற்று வரும் மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் நேபால் அணிக்கு எதிராக இந்திய மகளிர் இன்று விளையாடினர். இரண்டு அணியினரும், துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்திய வீராங்கனை கிரேஸுக்கு ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை. 26வது நிமிடத்தில், இந்தியாவின் தலீமா சிப்பர், ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பிறகு, 34வது நிமிடத்தில், நேபால் அணியின் சபித்ரா கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி 1-1 என சமமாக முடிந்தது.

இரண்டாவது பாதியில், 63வது நிமிடத்தில், கிரேஸ் டங்மேய் கோல் அடிக்க, இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. அதன்பின், 78வது நிமிடத்தில், அஞ்சு தமங் கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. இறுதியில் நேபால் அணி, கோல் அடிக்க கடைசி வரை முயற்சி செய்தது. ஆனால், இந்தியா சிறப்பாக டிபென்ஸ் செய்து, 3-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, இந்திய அணி தெற்காசிய கால்பந்து கோப்பையை 5வது முறையாக கைப்பற்றியது. தொடர்ந்து 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like