1. Home
  2. விளையாட்டு

ஃபிபா தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்

ஃபிபா தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து சங்கத்தின் (ஃபிபா) புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, ஒரு இடம் முன்னேறி 96-வது இடத்தை பெற்றுள்ளது.

முன்னதாக ஃபிபா தரவரிசையில் 97-வது இடம் வகித்திருந்த இந்திய கால்பந்து அணி, எல்லோ என்று அழைக்கப்படும் ஃபிபாவின் புதிய தரவரிசை அமைப்பில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் தென்னாசிய கால்பந்து சங்கத்தின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. தவிர, 2019 ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசிய கோப்பை போட்டிகாகவும் இந்திய அணி தனது பயிற்சியை தொடர்ந்து வருகிறது.

தென்னாசிய கால்பந்து சங்கத்தின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை மற்றும் மாலத்தீவு அணிகளுடன் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.

2018 ஃபிபா உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ், 6 இடங்கள் முன்னேறி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெல்ஜியம், பிரேசில், குரோவேஷியா, உருகுவே ஆகிய அணிகள் பிரான்சுக்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like