ஆசிய கோப்பை: 'லக்' இல்லாத இந்தியா தோல்வி!

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், இந்தியா ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதிய குரூப் போட்டியில், சிறப்பாக விளையாடிய இந்தியா, அதிர்ஷ்டம் இல்லாமல் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
 | 

ஆசிய கோப்பை: 'லக்' இல்லாத இந்தியா தோல்வி!

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதிய குரூப் போட்டியில், சிறப்பாக விளையாடிய இந்தியா, அதிர்ஷ்டம் இல்லாமல் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில், இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. இந்திய அணி முதல் பாதியில் மிக சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து பல சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கினாலும், இந்திய அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடியும் நேரத்தில், ஐக்கிய அரபு அணியின் கல்ஃபான் முபாரக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

முதல் பாதி 1-0 என அமீரகத்திற்கு சாதகமாக முடிந்தது. இரண்டாவது பாதியில், இந்திய அணி மீண்டும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், போதிய அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால், பலமுறை பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. இந்திய அணியால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் இந்திய அணி கடைசி வரை போராடியது. 88வது நிமிடத்தில், ஐக்கிய அரபு அமீரக அணியின் அலி மப்கோ இரண்டாவது கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP