ஐ-லீக் கால்பந்து: சென்னை சிட்டி மீண்டும் வெற்றி!

ஐ-லீக் இந்திய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சென்னை சிட்டி அணி, ஏய்ஸால் எஃப்சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து, லீக் தொடரை சென்னை அணி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 | 

பிரபல ஐ-லீக் கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. சென்னை சிட்டி அணி, அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில், ஏய்ஸால் அணியுடன் சென்னை மோதியது. போட்டி துவங்கி 28வது நிமிடத்தில், சென்னையின் சான்ட்ரோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். சிறிது நேரத்தில், ஏய்ஸால் அணியின் ஆல்பர்ட் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 

இரண்டாவது பாதியில், சென்னை சிட்டி, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 60வது நிமிடத்தில் சென்னை சிட்டியின் பெட்ரோ மான்சி அட்டகாசமான கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். 69வது நிமிடத்தில் மீண்டும் சான்ட்ரோ கோல் அடிக்க, 80வது நிமிடத்தில் பெட்ரோ மற்றொரு கோல் அடித்து 4-1 என முன்னிலை கொடுத்தார். ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில், ஏய்ஸால் அணியின் ஐசக் வன்லால்ருவத்பெலா, மற்றும் லால்காபுயிமாவியா ஆகியோர் கோல் அடித்து, சென்னைக்கு ஷாக் கொடுத்தனர். விறுவிறுப்பான போட்டி, 4-3 என முடிந்தது. 

இரண்டாவது இடத்தில் உள்ள சர்ச்சில் பிரதர்ஸ் அணியை விட சென்னை சிட்டி 8 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP