நான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி

தான் இந்திய கால்பந்து உலகத்தின் மெஸ்ஸி அல்ல என்று கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
 | 

நான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி

தான் இந்திய கால்பந்து உலகத்தின் மெஸ்ஸி அல்ல என்று கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். 

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக ஐதராபாத் நகரை சேர்ந்த சுனில் சேத்ரி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பையை இந்தியா கைப்பற்றியது.

கென்யாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில் இந்தாண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி

கொல்கத்தாவில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் இந்திய கால்பந்து சம்மேளனத்தில் துணை தலைவர் சுப்ரதா தத்தா சுனில் சேத்ரிக்கு விருதை வழங்கினார்.

இதில் பேசிய சேத்ரி, "என்னை மெஸ்ஸியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். நான் இந்திய கால்பந்து உலகத்தின் மெஸ்ஸி அல்ல" என்றார். மேலும் உலக கோப்பை கால்பந்து தொடர் குறித்து பேசிய அவர், "என்னை பொறுத்தவரை ஸ்பெயின் அணி வெல்லும் என்று நினைக்கிறேன். ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் நாடுகளுக்கு இடையே குடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கிறேன்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP