லெஸ்டர் சிட்டி மைதானம் அருகே ஹெலிகாப்டர் விபத்து; அணியின் உரிமையாளர் உயிரிழந்ததாக தகவல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் லெஸ்டர் சிட்டி அணியின் மைதானத்தின் அருகே, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அணியின் உரிமையாளர் விச்சை ஸ்ரீவத்தானபிரபா உட்பட 5 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
 | 

கத்துக்குட்டி அணியாக இருந்து, 2016ல் இங்கிலாந்து பிரீமியர் லீக் சாம்பியன்களாக மாறி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது லெஸ்டர் சிட்டி அணி. லெஸ்டரின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுவது தாய்லாந்தை சேர்ந்த அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீவத்தானபிரபா. 2010ம் ஆண்டு, சுமார் 366 கோடி ரூபாய் மதிப்பில் அந்த அணியை ஸ்ரீவத்தானபிரபா வாங்கினார். தற்போது அதன் மதிப்பு, சுமார் 3,500 கோடி ரூபாயாகும். 

ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நபரான ஸ்ரீவத்தானபிரபா, அநேகமான போட்டிகளை நேரில் காண வந்துவிடுவார். ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனேயும், மைதானத்தின் நடுவில் இருந்து தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் பறந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய போட்டி முடிந்தவுடன், கிளம்பிய அவரது ஹெலிகாப்டர், மைதானத்துக்கு வெளியே விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் அவருடைய மகள், விமானிகள் இரண்டு பேர், மற்றும் ஒருவர் இருந்ததாக தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. 

ஹெலிகாப்டரில் ஸ்ரீவத்தானபிரபா இருந்தது உறுதி செய்யப்பட்டாலும், அதில் பயணம் செய்தவர்களின் நிலை என்னவென லெஸ்டர் பகுதியின் போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP