ஹேரி கேன் அட்டகாசம்; துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே இரண்டு கோல் அடித்த இங்கிலாந்து வீரர் ஹேரி கேன், தனது அணி துனிசியாவை 2-1 என வீழ்த்த உதவினார்.
 | 

ஹேரி கேன் அட்டகாசம்; துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே இரண்டு கோல் அடித்த இங்கிலாந்து வீரர் ஹேரி கேன், தனது அணி துனிசியாவை 2-1 என வீழ்த்த உதவினார். 

உலகக் கோப்பையின் குரூப் ஜி-யை சேர்ந்த பெல்ஜியம் பனாமாவை வீழ்த்தியதை தொடர்ந்து, மற்ற இரண்டு அணிகளான இங்கிலாந்து மற்றும் துனிசியா மோதின. உலகிலேயே மிகவும் பிரபலமான கால்பந்து லீக்கை கொண்டுள்ள இங்கிலாந்து, அதிரடி வீரர்கள் நிறைந்த அணியாக இருந்தாலும், சர்வதேச போட்டிகளில் சரியாக சோபிப்பதில்லை. இந்தமுறை எப்படியாவது நாக் அவுட் சுற்றுக்கு சென்று பெரிய அணிகளுடன் இங்கிலாந்து மோதுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அணியின் கேப்டனாக இளம் வீரர் ஹேரி கேன் நியமிக்காட்டார். தனது முதல் உலகக் கோப்பையிலேயே கேப்டன் பொறுப்பேற்றதால் அவரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஏற்று மிகவும் சிறப்பாக விளையாடினார் கேன். 11வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, அதை ஜான் ஸ்டோன்ஸ் முட்டி கோலுக்குள் தள்ளினார். அதை கோல் கீப்பர் தடுக்க அது ஹேரி கேனிடம் வந்தது. அதை அவர் எளிதாக கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை கொடுத்தார். 

தொடர்ந்து இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி விளையாடி வந்தது. ஆனால் 35வது நிமிடத்தில் துனிசியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், அந்த அணியின் சாஸ்ஸி கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இரண்டாவது பாதியும் 1-1 என்றே சென்றது. சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க முடியவில்லை. போட்டி முடியும் சமயம் 91வது நிமிடத்தில், மற்றொரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், ஹேரி கேன் மீண்டும் கோல் அடித்து, கடைசி நிமிடத்தில் இங்கிலாந்துக்கு வெற்றியை உறுதி செய்தார். 

தற்போது குரூப் ஜி-யில், வெற்றி பெற்ற இரண்டு அணிகளான பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து, முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP