வன்கொடுமை வழக்கில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு மரபணு சோதனை!

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், ரொனால்டோவின் மரபணுவை பெற்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

வன்கொடுமை வழக்கில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு மரபணு சோதனை!

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், ரொனால்டோவின் மரபணுவை பெற்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலி நாட்டின் ஜுவென்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 32 வயதாகும் அவர், சிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். 2009ம் ஆண்டு, ரொனால்டோவுக்கு 24 வயதான போது, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஒரு பார்டியில் ரொனால்டோ கலந்து கொண்டார். அங்கு அவர் சந்தித்த ஒரு பெண்ணை ரொனால்டோ தனது அறைக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேத்தரின் மயோர்கா என்ற அந்த பெண், போலீசில் புகர் அளித்திருந்தார். ஆனால், அப்போது ரொனால்டோ தனக்கு சுமார் ரூ.1.50 கோடி கொடுத்து சமரச செய்துவிட்டதாக கூறுகிறார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து, லாஸ் வேகாஸ் போலீசார் விசாரணையை துவங்கினர்.

இது தொடர்பாக மயோர்கா, சம்பவத்தன்று தான் அணிந்திருந்த ஆடையை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். அதில், மயோர்காவின் மரபணு மற்றும் மற்றொருவரின் மரபணு இருப்பதாக தடயவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இன்னொருவர் ரொனால்டோவா என கண்டுபிடிப்பதற்காக அவரது மரபணுவை கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரொனால்டோவின் மரபணுவை பெற, இத்தாலி அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த 2009ம் ஆண்டு முதல், ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, கடந்த ஆண்டு, சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தொடர்ந்து இத்தாலியின் ஜுவென்டஸ் அணியில் சேர்ந்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP