பெரூவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்!

இளம் நட்சத்திர வீரர்களை கொண்ட பிரான்ஸ், தென் அமெரிக்க நாடான பெரூவை, 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்தி உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 | 

பெரூவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்!

இளம் நட்சத்திர வீரர்களை கொண்ட பிரான்ஸ், தென் அமெரிக்க நாடான பெரூவை, 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்தி உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

உலகக் கோப்பையின் குரூப் சி-யில், பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. தனது முதல் போட்டியில், பெரூவை டென்மார்க் வீழ்த்தியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 1-1 என டிரா செய்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால், நாக் அவுட் இடத்தை பிரான்ஸ் உறுதி செய்யும் என்ற நிலையில், பெரூவுடன் மோதியது. தென் அமெரிக்க குவாலிஃபையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பெரூ, உலகக் கோப்பையில் இதுவரை சோபிக்க முடியவில்லை.

போட்டி துவங்கியது முதல், நட்சத்திர வீரர்களை கொண்ட பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. பெரூவுக்கு பிரான்ஸ் வீரர்கள் அடிக்கடி பல கோல் முயற்சிகள் எடுத்தனர். 34வது நிமிடத்தின் போது,  பிரான்ஸின் கிலியன் ம்பாப்பே, கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன் பின், இரண்டாவது பாதியில் பெரூ, முழு ஆதிக்கம் செலுத்தியது. பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி பிரான்ஸுக்கு நெருக்கடி கொடுத்தது. கடைசி வரை பிரான்ஸ்சுக்கு தொல்லை கொடுத்து வந்து பெரூ வீரர்களால் போட்டியை சமன் செய்ய முடியவில்லை. 1-0 என போட்டி முடிந்தது. 

இந்த வெற்றியால், பிரான்ஸ், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ள பெரூ, உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP