பிரான்ஸ் அட்டகாச வெற்றி... இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

2018 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில், பலம்வாய்ந்த பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
 | 

பிரான்ஸ் அட்டகாச வெற்றி... இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

2018 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில்,  பலம்வாய்ந்த பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை, கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் போட்டிகளில் அசத்தலாக விளையாடிய பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரேஷியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்ச்சி பெற்றன. முதல் அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின.

பிரேசில் அணியை நாக் அவுட் செய்த பெல்ஜியம், கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரான்ஸுடன் மோதிய இந்த போட்டி, இறுதி சுற்றை போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டியின் ஆரம்பம் முதல், பிரான்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தியது. தலா 3 கோல்கள் அடித்துள்ள கிரீஸ்மேன், மற்றும் ம்பாப்பே பெல்ஜியம் டிபென்சுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், பிரான்சால் கோல் அடிக்க முடியவில்லை.  அந்த அணியின் ஜிரு பல வாய்ப்புகளை மிஸ் செய்து கடுப்பேற்றினார்.

பெல்ஜியம் அணியின் டி ப்ருயின் மற்றும் ஹசார்டு,  பலமுறை கவுன்ட்டர் அட்டாக் செய்து பிரான்சுஸுக்கு ஷாக் கொடுத்தார்கள். ஆனால், அந்த அணியும் கோல் அடிக்காததால், முதல் பாதி கோல் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதி துவங்கி ஐந்தே நிமிடங்களில் பிரான்சுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், அந்த அணியின் சாமுவேல் உம்டிட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பெல்ஜியம், தொடர்ந்து அட்டாக் செய்தது. தொடர்ந்து கிராஸ் செய்து, ஃபெல்லாலயினி மூலம் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால் பிரான்ஸின் டிபென்ஸ் வீரர்கள் அதை சிறப்பாக தடுத்தனர்.  பெல்ஜியம் அட்டாக் செய்வதை முழுமையாக பயன்படுத்தி, மேலும் பல கோல் வாய்ப்புகளை பிரான்ஸ் உருவாக்கியது. இறுதியில் 1-0 என வெற்றி பெற்று, 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்.

 நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில், இங்கிலாந்துடன் குரேஷியா மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP