பிரான்ஸ் அதிரடி! ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று முதலில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் அபாரமாக வெற்றி பெற்றது.
 | 

பிரான்ஸ் அதிரடி! ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று முதலில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் அபாரமாக வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30க்கு முதல் சி பிரிவு ஆட்டம் கஸான் நகரில் நடந்தது. இதில், பிரான்சும் ஆஸ்திரேலியாவும் மோதின.  ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடும் முயற்சி செய்தன. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில், பிரான்ஸ் அணியின் அண்டோனி க்ரீஸ்மேன் கோல் அடித்தார். சில நிமிடங்களில் ஆஸ்திரேலியாவும் கோல் அடித்தது. 

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் பவுல் போக்பா ஒரு கோல் அடித்தார். இதனால், பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. இதனால், கோல் அடிக்க ஆஸ்திரேலியா முயற்சி செய்தது. அந்நாடு கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தடுத்து முன்னிலையை தக்க வைக்க பிரான்ஸ் தீவிரமாக விளையாடியது. கடைசி வரை ஆஸ்திரேலியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தன்னுடைய வெற்றியை பதிவு செய்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP