கால்பந்தின் சூப்பர்ஹீரோ ரொனால்டினோ ஓய்வு பெற்றார்!

கால்பந்தின் சூப்பர்ஹீரோ ரொனால்டினோ ஓய்வு பெற்றார்!
 | 

கால்பந்தின் சூப்பர்ஹீரோ ரொனால்டினோ ஓய்வு பெற்றார்!


பிரேசில் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் ரொனால்டினோ, கால்பந்தில் இருந்து முழுவதும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

37வது வயதில் இருக்கும் அவர், தற்போது எந்த அணிக்காகவும் விளையாடவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு வரை ஃப்லுமினிஸ் என்ற பிரேசில் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஃபுட்சல் கால்பந்து தொடரில் சில போட்டிகளிலும் விளையாடினார்.

இந்நிலையில், அவர் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் ஏஜென்ட் ராபர்டோ அஸீஸ் தெரிவித்துள்ளார். 

பார்சிலோனா க்ளப் அணிக்காக 2008ம் ஆண்டு வரை விளையாடி, ஐரோப்பிய கால்பந்து லீக், ஸ்பெயின் லீக் உட்பட பல்வேறு கோப்பைகளை வென்றுள்ள ரொனால்டினோ, 2002ம் ஆண்டு பிரேசில் தேசிய அணிக்காக உலகக் கோப்பையும் வென்றுள்ளார். 

ரசிகர்களை கட்டிப்போடும் மாயாஜால கால்பந்து திறன் கொண்ட ரொனால்டினோவை, எதிரணி ரசிகர்கள் கூட வியந்து பார்ப்பது வாடிக்கை.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பைக்கு பின்னர், ரொனால்டினோவுக்கு ஓரு பெரிய விழா வைத்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அஸீஸ் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP