நாடு திரும்பினால் கொலைதான்!- கொலம்பிய வீரர்களை மிரட்டும் ரசிகர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்பை தவறவிட்ட கொலம்பிய வீரர்களுக்கு சொந்த நாட்டு ரசிகர்களே கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
 | 

நாடு திரும்பினால் கொலைதான்!- கொலம்பிய வீரர்களை மிரட்டும் ரசிகர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்பை தவறவிட்ட கொலம்பிய வீரர்களுக்கு சொந்த நாட்டு ரசிகர்களே கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். 

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பரபரப்பான நாக் அவுட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் கொலம்பிய அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டி நடைபெற்றது. வாழ்வா சாவா என்ற அந்த ஆட்டத்தில் மோதிய இரு அணிகளுமே தலா ஒரு கோல் என சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-4 என்ற கோல்கள் அடிப்படையில் கொலம்பிய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.

நாடு திரும்பினால் கொலைதான்!- கொலம்பிய வீரர்களை மிரட்டும் ரசிகர்கள்

கொலம்பிய அணியைச் சேர்ந்த மாடியுஸ் உரிமே மற்றும் கார்லஸ் பக்கா ஆகியோர் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க தவறினர். அவர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என்பதால் கொலம்பிய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வர தேவையில்லை என்றும் மீறி வந்தால், கொலை செய்யப்படுவார்கள் என்றும் கொலம்பிய ரசிகர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதே போல 1994ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கொலம்பிய அணி தோல்வி அடைந்தது. அதற்கு அப்போதைய வீரர் மாஸ்கோ எஸ்கபரின் சேம் சைட் கோல் தான் காரணம் என்று கூறி அவரை ஒரு ரசிகர் சுட்டு கொன்றார். கடந்த 3ம் தேதி தான் மாஸ்கோவின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. தற்போது இதே போல இரண்டு வீரர்கள் மிரட்டப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பேசிய மாஸ்கோ எஸ்கபரின் சகோதரர் சாச்சி, மாஸ்கோவை போல இன்னோரு உயிர் பறிபோக கூடாது. அந்த சம்பவத்திற்கு பிறகும் ரசிகர்கள் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP