வெளியேறியது ரஷ்யா: கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து ரஷ்யா வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
 | 

வெளியேறியது ரஷ்யா: கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து  ரஷ்யா வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். 

உலகக்கோப்பை கால்ப்நது தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. சோச்சியில் நடந்த இந்த போட்டியில் மக்களின் ஆதரவுடன் 31வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது ரஷ்ய அணி. உடனே குரோஷியானவின் ஆண்ட்ரேஜ் கிராமாரிக் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 

பலம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 101வது நிமிடத்தில் குரோஷியா அணி கோல் அடித்தது. பதிலுக்கு 115வது நிமிடத்தில் ரஷ்யா கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. இரு அணிகளும் சமனில் இருந்ததால் பெனால்டி ஷுட்-அவுட் முறை வழங்கப்பட்டது. அதில் குரோஷிய அணி கோல் அடித்து ரஷ்யாவை வீழ்த்தியது. 

இந்தாண்டு போட்டியை நடத்தும் ரஷ்ய அணி தொடர்ந்து வெற்றியை சந்தித்து வர உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் நேற்றைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP