ஐரோப்பிய தகுதிச்சுற்று: ஜெர்மனி த்ரில் வெற்றி!

2020 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகளில், நெதர்லாந்துடன் மோதிய ஜெர்மன் அணி, கடைசி நிமிட கோல் மூலம் 3-2 என த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
 | 

ஐரோப்பிய தகுதிச்சுற்று: ஜெர்மனி த்ரில் வெற்றி!

2020 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகளில், நெதர்லாந்துடன் மோதிய ஜெர்மன் அணி, கடைசி நிமிட கோல் மூலம் 3-2 என த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

2020ம் ஆண்டு நடைபெற்ற இருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றுகள் கடந்த வாரம் துவங்கின. இதில், பலம்வாய்ந்த நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மோதின. 2014 உலகக் கோப்பை வெற்றியாளரான ஜெர்மன் அணி, அதன்பிறகு தொடர்ந்து தடுமாறி வருகிறது. இந்த நிலையில், இளம் வீரர்களை கொண்ட ஜெர்மன் அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஜெர்மன் அணியின் சானே 15வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து ஜெர்மனி வீரர்கள் அதிரடியாக விளையாட, கனார்பி கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். முதல் பாதியை 2-0 என பலமாக முடித்தது ஜெர்மனி. 

இரண்டாவது பாதியில் மீண்டு வந்து நெதர்லாந்து வீரர்கள், தாக்குதல் ஆட்டம் ஆடினர். 48வது நிமிடத்தில், ஒரு ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் அந்த அணியின் டி லிஜ்ட் கோல் அடித்தார். தொடர்ந்து, 63வது நிமிடத்தில், டி பாய் கோல் அடிக்க, போட்டி சமன் செய்யப்பட்டது. ஆட்டம் முடியும் கடைசி நிமிடங்களில், மாற்று வீரராக களமிறக்கப்பட்ட ஜெர்மன் வீரர் ரயூஸ், சிறப்பாக விளையாடி செய்த பாஸை, இளம் வீரர் ஷுல்ட்ஸ் கோலுக்குள் தள்ளி ஜெர்மனி வெற்றி பெற உதவினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP